ஈரோடு ஜன 7
ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் இந்தியன் சிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில் கராத்தே போட்டி நடந்தது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .
குமிட்டி கட்டா மற்றும் சாதனை போட்டி போன்ற பிரிவுகளில் இந்த போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி கராத்தே போட்டியில் ஈடுபட்டனர். இவர்களை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு பதக்கமும் 40 பேருக்கு ஆரஞ்சு மஞ்சள் பிரவுன் மற்றும் பச்சை பெல்டுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதை இந்தியன் சிட்டோரியோ கராத்தே தலைமை பயிற்சியாளர் தாய் சென்சாய் கே சம்பத் வழங்கினார். ஈரோடு மாவட்ட தலைமை பயிற்சியாளர்கள் சம்பத் மனோஜ் சந்திரசேகர் டேவிட் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இறுதியில் பயிற்சியாளர் திருமலை நன்றி கூறினார்.