கலெக்டர், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., க்கள் பேராசிரியர் பங்கேற்று ரூ.1.26 கோடி கல்வி உதவி தொகை வழங்கினர்
ராமநாதபுரம், அக்.21-
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தன் சொந்த நிதியிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக 700- மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள யாஃபா மஹாலில் நடந்தது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு நவாஸ் கனி எம்பி கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள் நலன் கருதி கல்வி உதவித்தொகை வழங்குவதையும் அவர் பாராளுமன்றத்தில் கிடைக்கும் குறுகிய கால அவகாசத்தில் இராமநாதபுரம் தொகுதி மக்கள் நலனுக்கா பேசியது குறித்தும் பாராட்டி பேசினர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான்,எஸ்.டி குழுமம் சேர்மன் டாக்டர் அன்சாரி ராமநாதபுரம் நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா,த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உடபட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எம்.பிக்கள்,எம்எல்ஏக்கள்,கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கான உதவித்தொகைகளை வழங்கி பாராட்டினர். எஸ்.டி கூரியர் குழுமத் தலைவர் டாக்டர் அன்சாரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.பி நேர்முக உதவியாளர் அராபத் அலுவலக உதவியாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.