மார்த்தாண்டம், மார்- 9
தக்கலை மேக்காமண்டபம் பகுதி கடமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் இஸபெல் கமலா (75). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்காக மேக்காமண்டபத்திலிருந்து அரசு பஸ்ஸில் இன்று ஏறியுள்ளார். அப்போது பஸ்ஸில் அதிக கூட்டம் நெருக்கடியாக காணப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் பறித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கமலா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.