பொள்ளாச்சி
ஜூலை: 02
தில்லை நாட்டியாலயாவின் 6-வது சலங்கை பூஜை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மீனாட்சி அம்மன் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குரு ஸ்ரீ வித்யா சுதர்சன பாலாஜி அவர்கள் தலைமை வகித்தார். மேலும் சலங்கை பூஜை நடன நிகழ்ச்சியில் மாணவிகள் அக்ஷரா, காருண்யா ஸ்ரீ, தியா ஸ்ரீ, யாழினி, ஸ்ரீ பத்மப்ரஜனா, கார்த்திகா, லீனா ஸ்ரீ பிரதிக்ஷா ஆகியோர் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு யோகா, நடனம், கராத்தே ஆசான் சு. பழனிச்சாமி, ஸ்ரீ யோகாலயா நிறுவனர் எஸ்.சங்கர், பி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதன்மை வகுப்பு கல்வித் தலைவர் சௌமியா சந்தோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், நடன ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாணவிகளின் நடன நாட்டியத்தை கண்டு களித்தனர்.