அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி,
சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் அன்னாரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி ஏற்பாட்டில் பேரணியாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், மருத்துவ அணி துணை செயலாளர் மற்றும்
முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர்
கீர்த்திகா முனியசாமி,
அமைப்பு செயலாளர்
சின்னத்துரை,
மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர்
ராஜலெட்சுமி,
முன்னாள் எம்எல்ஏ
மலேசியா பாண்டியன்
ஆகியோர் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர் கிளைக் கழகச் செயலாளர்கள் கழகத் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.