மயிலாடுதுறை.பிப் 9
மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 66-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர் .
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் பழமை வாய்ந்த சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 66-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையில் இருந்து கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலாவாக, பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.