நாகர்கோவில் ஜூலை 6
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டிற்கு 2 நெல் சாகுபடி முறைகள் உள்ளது . இதில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் ஜுன் மாதம் தொடங்கும் அதற்கு முன் வரும் கோடைக்காலத்தில் ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் தூர்வாருதல் , பழுதுகள் சீரமைத்தல் கரை உடைப்புகள் சீரமைத்தல் உன்னிட்ட பணிகளை பொதுப்பணி துறையினர் செய்வது வழக்கம். ஆனால் கடந்த கோடை காலத்தில் இந்த பணிகளை பொதுப்பணித் துறையின் செய்யவில்லை. அது மட்டுமல்ல கடந்து புயல் மழையில் தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அதனையும் அதிகாரிகள் சீரமைக்காமல் மெத்தனமாக இருந்து விட்டனர். இதற்கிடையே ஜுன் ஒன்றாம் தேதி முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி விட்டனர் . அதே நேரம் உடைப்பு ஏற்பட்ட கால்வாயை சீரமைக்காததால் தோவாளை பகுதியில் 6,500 ஏக்கர் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருகியது . இதனால் விவசாய்கள் மனம் உடைந்த நிலைக்கு ஆளாகி உள்ளனர். உரிய நேரத்தில் உடைப்பு ஏற்பட்ட கால்வாயை சீரமைக்க முன் வராத தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தெரிவிக்கையில்:- விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும், மயிலாடி கூண்டில் பாலம் இடித்து நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்குள்ள எம். எம் கால்வாயிலும் தண்ணீர் விடாததால் அந்த பகுதி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது , பாம்பூர் கால்வாய் நிதி ஒதுக்கியும் சீரமைப்பு பண்கள் நடைபெறாததால் அந்த பகுதியிலும் 200 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.மேலும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது .