ஈரோடு ஜூன் 27 கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 63 பேர் பலியாகி உள்ளனர் .இதைக் கண்டித்து ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
இதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் ஈரோடு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் நடைபெறும் டாஸ்மாக், கஞ்சா ,கள்ளச்சாராயம் விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும் கள்ளச்சாராய சம்பவத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது