ஈரோடு அக் 2
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நாளில் உள்ள கார்க்குழு சார்பாக மாணவிகளுக்கான தற்காப்புக்கலைப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உள்ள கப்புகார்க்குழுவின் சார்பாக மாணவிகளுக்கு “தற்காப்புக்கலை நுணுக்கங்கள்” என்னும் பொருளில் மாணவர்களுக்கான தற்காப்புக்கலை பயிற்சி நிகழ்வானது நடைபெற்றது. தற்காப்புக்கலை பயிற்சியினைக் கற்றுக்கொடுக்க ஈரோடு புடோகோகை நிறுவனத்தின் தலைவர் சென்சாய் கணேசன் மற்றும் சென்சாய் தேவேந்திரன் ஆகியோர் மற்றும் குழுவினர் வருகை தந்து மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சினை கற்றுக்கொடுத்தனர். இப்பயிற்சி நிகழ்வில் பல்வேறு துறையில் இருந்து 615 மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். உள்ளகப்புகார்க்குழு தலைவர் கார்த்திகேயினி மற்றும் அவரது குழுவும் சேர்ந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும் இவ்விழாவில் சிறப்பாக பயிற்சி செய்த 24 மாணவிகளுக்குப் புடோகோகை நிறுவனத்தின் சார்பாகப் பதக்கங்களை வழங்கி சிறப்பு செய்தனர். சிறப்பானதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த உள்ளகப்புகார்க்குழுவினை கல்லூரியின் தாளாளர் தங்கவேல் பாராட்டினார்.