தஞ்சாவூர் ஜூன் 26
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை, பட்டாமாறுதல் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 605 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இதைப் பெற்றுக் கொண்ட அவர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக் கைகள் உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவு தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூபாய் 96 ஆயிரம் 11 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 6 பேருக்கும், தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருவரு க்கு தாக்கோ மானியம் விடுவித்த ஆணையையையும், கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து ஒருவருக்கு ஆக்சிஜன் செறிவூட்டி யினையும் கலெக்டர் வழங்கினார்
நிகழ்வில் உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தாட்கோமாவட்டம் மேலாளர் ரங்கராஜன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.