செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54 ஆவது பட்டமளிப்பு விழாவில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அவர்கள் தலைமையில் பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ மாணவியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சான்றிதழ்களை வழங்கினார் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி 1965 முதல் இன்று வரை மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒரு சிறந்த பல் நோக்கு மருத்துவமனையாக 1750 படுக்கை வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது இந்த மருத்துவமனையில் 22 முதுகலை மற்றும் எட்டு சிறப்பு முதுகலை பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம் திருவண்ணாமலை இராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது இந்த மருத்துவமனையின் மூலம் 3500 முதல் 4000 புற நோயாளிகள் நாள்தோறும் பயன்படுகின்றனர் உள் நோயாளிகள் சிறந்த சிகிச்சை பெறுகின்றனர் 24 மணி நேரமும் துரிதமான முறையில் செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றி வருகிறது மேலும் விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சேவைகள் தாய் சே நலனை உறுதி செய்கின்றன செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே சுகப்பிரசவ சதவீதத்தில் முதன்மை வகிக்கிறது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆண்டுதோறும் 500 இளங்கலை மருத்துவர்கள் 94 முதுகலை மருத்துவர்கள் 22 சிறப்பு முதுகலை மருத்துவர்கள் மற்றும் 768 துணை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது மேலும் 610 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு மாணவர்களும் 158 நர்சிங் மாணவர்களும் கல்வி கற்கின்றனர்இ ன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 47 மாணவர்கள் 54 மாணவியர்கள் என மொத்தம் 101 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது மாதத்திற்கு நூறு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் ஆஞ்சியோ பிளாஸ்டிமேஸ் மேக்கர் கருவி பொருத்துதல் போன்ற ரூபாய் 40 லட்சம் வரை செலவினம் கொண்ட உயர் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து கல்லீரல் சிறுநீரகம் கருவிழி போன்ற உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகள் திருக்கழுக்குன்றத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி ரூபாய் 5 கோடி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி தீவிர சிகிச்சை பிரிவு 50 படுக்கைகள் கட்டிடம் கட்டும் பணி ரூபாய் 20 கோடி ஆத்தூர் பிற்காப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு இல்லம் கட்டிடம் கட்டும் பணி ரூபாய் 16 கோடி ஆத்தூர் பிற்காப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு சமூக வலுவூட்டலுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மைய கட்டிடம் கட்டும் பணி ரூபாய் 27 கோடி தாம்பரம் சானிட்டோரியத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி ரூபாய் 110 கோடி ஆக மொத்தம் ஐந்து பணிகள் ரூபாய் 178 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களாலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களாலும் கொண்டுவரப்பட்டு வருமுன் காப்போம் திட்டம் கண்ணொளி காப்போம் திட்டம் கலைஞர் காப்பீடு திட்டம் 108 ஆம்புலன்ஸ் சேவை இளம் சிறார் இருதய காப்பீட்டு திட்டம் மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டம் பள்ளி சிறார் நலத்திட்டம் மகப்பேறு திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் பேசியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூபாய் 23.95 கோடி செலவில் பத்து நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டிடங்கள் 11 துணை சுகாதார நிலையங்கள் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் குடியிருப்பு புற நோயாளிகள் பிரிவு வட்டார பொது சுகாதார அளவு வட்டார பாலிடெக்னிக் நோய் தடுப்பு மையம் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் திருத்தேரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையம் நவீன சமையல் கூடம் ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய காசநோய் சிகிச்சை மையம் சிடி ஸ்கேன் உபகரணம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து பூங்கா மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு பரவலாக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு உடற்பயிற்சி கூடம் மற்றும் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர் மேலும் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரூபாய் 222.88 கோடி செலவில் 40 புதிய மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது செங்கல்பட்டு மாவட்டம் பணிகள் நடைபெறும் கட்டிடங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூபாய் 20 கோடி 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் (செங்கல்பட்டு தொகுதி) அரசு மருத்துவ மனைகள் ரூபாய் ஆறு புள்ளி 89 கோடி தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் (பல்லாவரம் தொகுதி) ரூபாய் ஒரு கோடி தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆய்வகம் (பல்லாவரம் தொகுதி) ரூபாய் 2.20 கோடி செய்யூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் வகையில் கூடுதல் கட்டிடம் (செய்யூர் தொகுதி) ரூபாய் 110 கோடி தாம்பரம் அரசு மருத்துவமனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கூடுதல் கட்டிடங்கள் (தாம்பரம் தொகுதி) அஞ்சு புள்ளி அம்பத்தி ஒரு கோடி சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ரூபாய் 5 கோடி திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் (திருப்போரூர் தொகுதி) தமிழக அரசு வரலாற்றில் தமிழக அரசு வரலாற்றில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு ஒரே ஆண்டில் 225 உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கி நன்கு திறமையுள்ள மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் இதில் அதிக அரசு மருத்துவமனை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்றைக்கு மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது இந்த ஆண்டு மட்டும் 62 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் ஒரு பெரிய பேரிடர் காலத்தில் உங்களால் சிறந்த மருத்துவராக சாதிக்க முடியும் எந்த நாட்டில் வேண்டுமானாலும் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் அதற்கான ஒரு மிகச் சிறந்த பயிற்சி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உங்களுக்கு தந்திருக்கிறது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியை பொறுத்த வரை அதிகம் விபத்துக்கள் எங்கே நடந்தாலும் அது சிகிச்சை தருகின்ற பணியை நம்முடைய செங்கல்பட்டு மாவட்டம் மருத்துவமனை அந்தந்த துறைகளில் சிறப்பான சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக சிறந்த விளங்கிக் கொண்டிருக்கிறது என்று பேசினார் இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தர் கே நாராயணசாமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு ) ஜோதி குமார் மற்றும் துணை முதல்வர் அனிதா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் மற்றும் பேராசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது