கிருஷ்ணகிரி அக்.18,
அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு போச்சம்பள்ளி மற்றும் நாகரசம்பட்டி பகுதிகளில் இனிப்புகள் மற்றும் அண்ணதானம் வழங்கி விழாவாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலை அருகே முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி 500 நபர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, வங்கி தலைவர் செட்டிகுமார், முன்னாள் துணை சேர்மேன் திருமாள், முன்னாள் தலைவர் சக்கரை, தொழில் அதிபர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. இராஜேந்தின் கலந்து கொண்டு ஜெ. எம் ஜி ஆர். படத்தை திறந்து வைத்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். விழாவில் மங்கலப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா பழனி, வைரவன், குள்ளனூர் சீனி, விஜி, முல்லை ராஜா, பிரகாஷ், அணிக்குமார், சுண்ட பெருமாள். சிவகுமார், காசி, கார்திக், செல்வம், தருமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரோடூர் ரமேஷ் நன்றி கூறினார்.
அதேபோல் நாகரசம்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், 2026ல் கட்சியினர் ஒன்றுபட்டு ஆட்சியை பிடிக்க பாடுபட வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர பேரூராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய அவைத்தலைவர் வடிவேலன், ராஜா அண்ணாமலை, மஞ்சுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட அமைப்பாளர் கே.பி.எம்.சதீஸ் கலந்து கொண்டு ஜெ. மற்றும் எம் ஜி ஆர். படத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம்குணசேகரன், முருகையன், மற்றும் அகரம் கருப்பண்ணன், முன்னார் கவுன்சிலர் விமலாசுப்பிரமணி, பழனி முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் பழனி நன்றி கூறினார்.