சென்னை, பிப்- 09,
சென்னை அரும்பாக்கத்திலுள்ள கோலப்பெருமாள் வைஷ்ணவ் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கான 52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது .
பள்ளியின் முதல்வர் இராமசுப்பிரமணியன், துணை முதல்வர் சிலம்புச் செல்வி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி உடற்கல்வி இயக்குனர் பிராங்கிளின், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்ராஜ், ஜெயஸ்ரீ, மூர்த்தி, சத்யகுமார்,பிச்சம்மாள் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் ராமசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இந்நிகழ்ச்சியில்
ஊழல் தடுப்பு காவல்துறை இணை இயக்குனர் சந்தோஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்போட்டியினை துவக்கி வைத்தார். மேலும் பள்ளியின் தாளாளர் ஹித்தேஷ் கனோடியா குழுமத் தலைவர் கோபால்ஜி அகர்வால் மற்றும் பெற்றோர்களுக்கும் மாணவ, மாணவியருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
எங்கள் கோலப்பெருமாள் வைஷ்ணவ் பள்ளியின் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி அனைத்து பயிற்சிகளை தரமான முறையில் அளித்து கொண்டே வருகிறோம் .
எங்கள் அகாடமியில் பயின்றவர்கள் ஆசியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார்கள். மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும் , உடல்நலம் பேணவும் முயற்சியை அகாடமி மூலம் சேவையாற்றி வருகிறோம் என்றார்.