சென்னை, ஆகஸ்ட் – 27,
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52 வது ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் நாள் வியாழக்கிழமை அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளம் உள்ள திருக்கொடியை பவனியாக கொண்டு வரப்பட்டு புனிதம் செய்யப்பட்ட பின் திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயர கொடிக் கம்பத்தில் சென்னை மயிலை உயர் மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைப்பார் .
ஒவ்வொரு ஆண்டும் மையம் கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் இறைவேந்தல் ஆண்டாகவும் யூபிலிஆண்டின் நிறைவாகவும் கொண்டாடப்படுகிறது.
கொடி விழாவில் தொடங்கி நலம் பெறும் விழா, பக்தர்கள் சபை விழா,தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர் விழா, குடும்ப விழா,அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு வழி ஜெப வழிபாடுகளுடன் காலையிலிருந்து மாலை வரை தொடர் நடைபெறும் . சிறப்பு நவ நாட்களில் திருபலி மற்றும் தேர்பவணியும் நடைபெறும் .செப்டம்பர் 7ஆம் நாள் மாலை ஐந்து முப்பது மணிக்கு சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஏனைய உயர் மறை மாவட்ட குழுக்களோடு இணைந்து கூட்டு திருப்பலியும் அனைத்து தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் தேர் பவணியும் நடைபெறும் .
செப்டம்பர் 8ஆம் தேதி அன்னையின் பிறந்த நாளும் திருத்தலத்தின் 53வது ஆண்டு விழா தொடக்கமும் கொண்டாடப்படும் .
மேலும் வார விடுமுறை நாட்களில் இவ்விழா நடப்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்கள் . பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருளப்பா தலைமையில் இத்திருத்தல அடுத்த தந்தையர்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் பங்கு மக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அருட் தந்தைகள் பிரான்ஸில் சேவியர், சைமன் சில்வஸ்டர், மைக்கேல்துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.