கன்னியாகுமரி ஆக 19
குமரி மாவட்டம் கோவில்விளை வெங்கலராஜபுரத்தில்
வெங்கலராஜன் மன்னன் அறக்கட்டளை சார்பில் வெங்கலராஜன் மன்னரின் 500- வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வெங்கலராஜன் மன்னரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர் பாய், கவிஞர் நீலம்மதுமயன், கோவில்விளை ஊர் தலைவர் ராஜ்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் தாமரை பிரதாப்,குமார்,ரகுபதி, தங்க சிவசாமி, மணிமுத்து,தீபன் ,பால கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்று வெங்கலராஜன் மன்னரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.