நாகர்கோவில் அக் 1
குமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் லதா வயது 40 இவர் சீயோன்புரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். லதாவிற்கும் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று லதா வீட்டில் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது லதாவின் உறவினர் மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த ராஜ விஜயன் வயது 33 அங்கு வந்துள்ளார் இது ராஜ விஜயனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது அப்போது ராஜ விஜயன் அவரது நண்பன் சுபின் வயது 33 இருவரும் சேர்ந்து லதாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.
லதாவை சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அங்கிருந்து அரிவாளால் அவரை வெட்ட முயன்ற போது லதாவின் 5 வயது குழந்தை ரக்ஷதா-க்கு வெட்டு விழுந்தது இதில் ரக்ஷதாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லதா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயன், சுபின் இரண்டு பேர் மீதும் பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் தேடி வருகின்றனர்.