ஈரோடு நவ. 18
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பயணம் மற்றும் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த உறுப்பினர் பயணம் சென்னையை அடைகிறது .இந்த வாகன விழிப்புணர்வு பயணக் கூட்டம் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்தது.
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு தலைவர் கீதா தலைமை தாங்கினார் . எச் .எம் .எஸ் .மாவட்ட தலைவர் ஜீவா சண்முகம் தொடங்கி வைத்தார். உழைப்பாளர் சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார். இதில் கிராம தொழிலாளர் இயக்கத்தின் மத்திய பொது தொழிற்சங்கத்தின் மாநில பொது செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ரமணி, சந்திரகுமார், ஆறுமுகம், முதன்மை மற்றும் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இ எஸ் ஐ மருத்துவ வசதி, மாதம் ரூ.5000க்கு மேல் ஓய்வூதியம் ,வீட்டு வசதி போன்றவை வழங்க வேண்டும். மாநில தொழிலாளர் சட்டங்களையும், உரிமைகளையும் , முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த 36 நல வாரியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.