வேலூர்_18
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம்,ஊசூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஓம் வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் 16/6/24 அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 வது நாளாக மண்டல பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேம்பு மாரியம்மன்க்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகமும் ,ஆராதனையும் ,ஸ்ரீ வேம்பு அம்மா பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்டல பூஜை விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ வேம்பு அம்மா தனது திருகரங்களால் அன்னதானம் வழங்கினார் .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.