ஈரோடு ஜன 22
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ந் தேதி நடக்கிறது . இதையொட்டி கடந்த 10 ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17 ம் தேதி வரை நடந்தது பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிதாலட்சுமி உள்பட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 18 ம் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது .இதில் 8 பேர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதனால் 47 பேர் போட்டிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வெட்பு மனுவை ஏற்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இவரது ஓட்டு கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் அவர் எப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்று மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தாமதமானது இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .
இதன் பிறகு சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது இதன் பிறகு நள்ளிரவு 1.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது இதன்படி 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது .அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.