திருப்பூர், நவ. 4:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20,570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.
இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுதிறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நகர்புற பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அனைத்து அரசு பேருந்துகளிலும் எவ்வித கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து அட்டையும் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை என்பது உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 12,666 நபர்களுக்கு ரூ.30.39 கோடி மதிப்பீட்டில் மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகையும்இ 5,010 நபர்களுக்கு ரூ.12.02 கோடி மதிப்பீட்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை.
358 நபர்களுக்கு ரூ.85.92 லட்சம் மதிப்பீட்டில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையும். 450 நபர்களுக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையும்இ 153 முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36.72 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு உதவித்தொகை.
171 நபர்களுக்கு ரூ.20.52 லட்சம் மதிப்பீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையும்இ 1இ515 நபர்களுக்கு ரூ.58.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 17 நபர்களுக்கு ரூ.76 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையற்றோர் வாசிப்பாளர் உதவித்தொகையும், 183 நபர்களுக்கு ரூ.38.33 லட்சம் மதிப்பீட்டில் சுயதொழில் புரிவோர் மானிய தொகையும், 9 நபர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காது கேளாதோர் மற்றும் வாய் போசாதோர் திருமண உதவித்தொகையும், 18 நபர்களுக்கு ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் கை, கால் இயக்க குறைபாடுடையோர் திருமண உதவித்தொகை.
20 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளியை திருமணம் புரியும் மாற்றுத்திறனாளி திருமண உதவித்தொகையும் என மொத்தம் 20 ஆயிரத்து 570 நபர்களுக்கு ரூ.44.48 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் – 29 -ல் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கால் பாதிக்கப்பட்ட பிரேமலதா கூறியதாவது
எனது பெயர் பிரேமாலதா. வயது 48. நான் திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக கால் மாற்றுத்திறனாளியான நான் எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் மிகவும் துயரத்தில் இருந்து வந்தேன். எனது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதுடன் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
இதனால் எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எங்களை போன்ற வறுமையான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன்படி நான் நேரில் சென்று சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் தொழில் செய்ய வேண்டி கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.
எனது மனுவை கருணையுடன் பரிசீலனை செய்து எனக்கு தேவையான உதவித்தொகை மாதம் ரூ.1.500 தொழில் செய்ய தையல் மெசின் மற்றும் ரூ.1.00 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளார்கள். இதனால் மற்றவர்களின் உதவியின்றி நானே எனது வேலையை செய்து வருமானம் ஈட்டிக் கொள்ள முடிகிறது. என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் சமுதாயத்தில் தனி அங்கீகாரம் உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.
———
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பயனடைந்த பிரேமலதா.