திண்டுக்கல் மணிகண்டன் அறக்கட்டளையின் சார்பாக
உதயம் காலனி ஆர்.எம். காலனி, 6-வது கிராஸில் அமைந்துள்ள மணிகண்டன் திருக்கோயிலில் 43 –
ஆம் ஆண்டு மண்டல பூஜையும், மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீக செம்மல் ஜி.சுந்தரராஜன் ஐயா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தூண்டில் விநாயகர், ஸ்ரீ வெற்றிவேல் முருகன், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராஜ நாகம்மாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ மஞ்சள் மாதா, ஸ்ரீ முனியப்பன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுடன் மூலவர் ஸ்ரீ ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா.நிகழ்ச்சி தலைமை குருநாதர் கே. காளிமுத்து பிள்ளை தலைமையில் அனைத்து தெய்வங்களுக்கும் மண்டல பூஜை செய்து கலசத்தில் புனித நீர் ஊற்றினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்த கோடி பெருமக்களும், ஐயப்ப பக்தர்களும் கலந்து கொண்டு தெய்வங்களின் அருள் பெற்றுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து தெய்வீக பாடல்களை விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணிகண்டன் திருக்கோயில் உதயம் காலனி
6- வது கிராஸ் ஆர்.எம்.காலனி நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.