கரூர் மாவட்டம் – ஜுலை – 30
கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 43,061 விவசாயிகளுக்கு ரூ. 10.265 கோடி மதிப்பீட்டில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதாரத்தை பன்மடங்கு உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக, பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவையில் முக்கியப் பங்காக விளங்கக்கூடிய காய்கறிகளை விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்து நாள்தோறும் நேரடியாக பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில் உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் இடைத்தரகர்களின்றி தங்களின் விளைபொருட்களுக்கு அதிக இலாபம் பெறுவதுடன் பொதுமக்களும் தங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை குறைந்த விலையில் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது மாறிவரும் நவீனகால சூழலுக்கேற்ப இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும், பொதுமக்களும் தங்கள் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை தங்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாடித்தோட்டங்களில் காய்கறி செடிகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது.
அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களின் பரப்புவிரிவாக்கம், நிழல்வலை கூடாரம் அமைத்தல், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு, காய்கறி விதைத்தளைகள், ஊட்டச்சத்துதளைகள், பழச்செடிதொகுப்பு வழங்குதல், மாடி தோட்டத்தளைகள், துல்லியபண்ணையத் திட்டம், வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி ஊக்குவித்தல்,
தென்னையில் ஊடுபயிராக வாழை, அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல், தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், தெளிப்பான், வெற்றிலைபயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற திட்டக்கூறுகள் 20,275 பயனாளிகளுக்கு ரூ. 4.28 கோடி நிதியில் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சின்ன வெங்காயம் பரப்புவிரிவாக்கம், அவகேடோ பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் அமைத்தல், தற்காலிக பந்தல் அமைத்தல். அங்கக பண்ணையம், பாரம்பரிய காய்கறி ரகங்கள் சாகுபடி ஊக்குவித்தல் ஆகிய இனங்களின் கீழ் 2,360 பயனாளிகளுக்கு ரூ. 4.73 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பல்லாண்டு பயிர்கள் சாகுபடி பரப்புவிரிவாக்கம், பழ செடி தொகுப்பு வழங்குதல், காளான் வளர்ப்பு குடில், காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தல் மற்றும் காய்கறி விதைதளைகள் வழங்குதல் ஆகிய இனங்கள் 20,384 பயனாளிகளுக்கு ரூ. 1.135 கோடியும், தேசியமூங்கில் இயக்கம் மூலம் 42 பயனாளிகளுக்கு ரூ. 12.00 இலட்சம் மானியத்தில் மூங்கில் பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 43,061 விவசாயிகளுக்கு ரூ. 6.02 கோடி மதிப்பிலான மானியம் பெற்றுப் பயனடைந்துள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
மாடித்தோட்டம் அமைத்து பயனடைந்துவரும் காதப்பாறை பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவி உதயா பானு, தெரிவித்ததாவது
எனது பெயர் உதயா பானு இயற்கை முறையில் விளையும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் உண்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதால் அனைவரும் தற்பொழுது இயற்கை முறையில் விழைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். அதனால் எனது சொந்த வீட்டின் மேற்புறம் மாடித்தோட்டம் மூலம் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும், எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்டகாலமாக இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி 6 வகையான காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படும். எனவும், மேலும் அதனை வளர்ப்பதற்கு தென்னை நார் கட்டிகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குகிறார்கள் என்பதை அறிந்து எனது வீட்டின் மாடியில் இயற்கை முறையில் தோட்டத்தினை அமைத்தேன்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் எங்களின் அன்றாட குடும்ப தேவைக்குரிய காய்கறிகள் அனைத்தும் எனது மாடித்தோட்டத்தின் வாயிலாகவே கிடைத்தது. ஆரோக்கியமான, சத்தான காய்கறிகளை நாங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் மனதிருப்தியுடன் உள்ளோம். இதுபோன்று அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களைப் போன்றோரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்” திட்டத்தின் கீழ் பயனடைந்துவரும் உதயா பானு தெரிவித்தார்.
மாடித்தோட்டம் அமைத்து பயனடைந்து வரும் காளியப்பனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி அவர்கள் தெரிவித்ததாவது.
எனது பெயர் லட்சுமி, தினசரி எனது குடும்பத்தின் அன்றாட காய்கறித் தேவைக்காக கடைகளுக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவது வழக்கம். இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்து என்னைப்போன்ற இல்லத்தரசிகளின் எண்ணங்களுக்கு உயிரோட்டம் தந்துள்ளது குறித்து கேள்விப்பட்டேன். இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளால் நாம் மட்டும் அல்லாமல் நமது சந்ததியினரும் பாதிக்கப்படாமல் பாதுகாத்திடும் வகையில் இத்திட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. வீட்டுத்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை நாம் உண்ணும்பொழுது நம்மை அறியாமலேயே ஒருவித ஆனந்தம் ஏற்படுகிறது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் என்னைப்போன்ற இல்லத்தரசிகளுக்கு இது மிகுந்த பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினை எங்களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லத்தரசிகள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் கீழ் பயனடைந்துவரும் லட்சுமி தெரிவித்தார்.