திண்டுக்கல் அத்தரீகத்துல்
ஹக்கிய்யத்துல் காதிரிய்யா மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித பிறந்த தின (மீலாது) முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) நினைவு கந்தூரி (அன்னதான) விழா மனிதநேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் சாத்தங்குடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.அக்பர் பாஷா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவையின் தலைவர் கே.எம்.ஏ. முஹம்மது அலி, எம் தாஜுத்தீன், திண்டுக்கல் திருவருட் பேரவையின் பொருளாளர் நாட்டாண்மை டாக்டர். என்.எம்.பி. காஜாமைதீன், ஸ்ரீராமபுரம் ஹாஜி முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எஸ்.அஹமதுசலீம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் துணை அவைத் தலைவர் என். சேக் தாவுது, ஜெ.முஹம்மது ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் (ஓய்வு)
எஸ்.காஜாநஜ்முத்தீன் வரவேற்புரை ஆற்றினார். மவுன்ஸ்புரம் பள்ளிவாசல் இமாம் என்.கே. சாதிக்அலி யூசுபி கிராஅத் ஓதினார். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் கலிபா ஆலிம் புலவர் எஸ்.ஹீஸைன் முஹம்மது மன்பயீ இறைதுதிப்பா ஓதினார்.எம்.மஹபூப்சுப்ஹானி ஹக்கிய்யத்துல் காதிரிய்யா கலந்து கொண்டு நபிபுகழ்ப்பா பாடினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காயல்பட்டினம் மஅஸ்கருர்ரஹ்மான் மகளிர் அறபுக்கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ். மௌலவி. ஹச்.எ.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி , திண்டுக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சுவாமி நித்யா சத்வானந்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். எம். சலீம் முகமது, ரியோ குழந்தைகள் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர்.எம். சரவணன், திண்டுக்கல் திருவருட் பேரவையின் கௌரவத் தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி, திண்டுக்கல் திருவருட் பேரவையின் செயலாளர்
ஆர்.மரிவளன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் லியோ மருத்துவமனை டாக்டர்.எம். சரவணன் கலந்து கொண்டு போலீஸ் பாய்ஸ் கிளப், திண்டுக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீராமபுரம் ஹாஜி. முஸ்தபா மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல் பேகம்பூர் ஹஜ்ரத் அமீருன்னிசா ஓரியண்டல் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு முதலுதவி பெட்டிகளை வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கிரீன் பார்க் மற்றும் கிரீன்வேலி மாணவ, மாணவியர், ஹாஜி. முஸ்தபா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனித மாதமாகிய ரபிய்யுல் அவ்வல் மாதம் பிறந்த குழந்தைகள் இருவருக்கு 15 வருட தொடர் வைப்பு டெபாசிட் செய்து சேமிப்பு பழக்கத்தை ஊக்கவிக்கும் வகையில் தலா ரூபாய் 1000 விதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பேசும் உரைகளிலிருந்து ஆண்களுக்கு பத்து கேள்விகளும், பெண்களுக்கு பத்து கேள்விகளும் கேட்கப்பட்டு சரியான பதில் சொன்ன ஒவ்வொரு பதிலுக்கும் 100 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மதமாக மும்மதத்தைச் சார்ந்த சுமார் 10,000 நபர்களுக்கு கந்தூரி (அன்னதான) விழா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் சிறார் பாடல்கள் மற்றும் (FAITH) நம்பிக்கை ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.நிகழ்ச்சியின் முடிவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் செயலாளர் ஜெ.முஹம்மது சதக்கத்துல்லாஹ் நன்றி கூறினார்.