மார்ச்: 10
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் டி.யூ. சி.சி. தொழிற்சங்க மத்திய குழு உறுப்பினருமான
தேளி க. காளிமுத்து 41.வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததான முகாம் மரக்கன்று நடும் விழா திருப்பூர் புறநகர் பகுதியில் காங்கேயம் தாராபுரம் பல்லடம் மடத்துக்குளம் அவிநாசி உடுமலை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணமாக சென்று கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில்
கருவம்பாளையம் 28 வது வார்டு செயலாளர் பர்னிச்சர் ஆர். செந்தில் குமார், பகுதி கழக பிரதிநிதி ராஜபாண்டி, வாட்டர் பாலு
பகுதி கழக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.