நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இதை தொடர்ந்து வேலை விஷயம் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து இடம்பெயர்ந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்துவிட்டனர்.
உதகை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்து தம்பதியினர் கூலித் தொழிலுக்கு சென்று வருகின்றனர். தம்பதியின் மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு மார்க்கெட்டில் டிரைவராக பணியாற்றும் தொட்டபெட்டாவை சேர்ந்த யுவராஜ் என்ற ஹரிஷ் அறிமுகமானார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக விரிவடைந்துள்ளது.
இந்நிலையில் காதலர்களிடையே பிரச்சினை ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து மாணவி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 10ந்தேதி மாணவியின் உறவினர் வீட்டு விசேஷம் சம்பந்தமாக மாணவியின் தந்தை சொந்த ஊர் சென்றுள்ளார். மாணவியின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில்
தன்னுடைய தோழிகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பத்தால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை என்பதால், தாயார் இதுகுறித்து தேனாடு கம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி மாயம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 13-ந் தேதி மாணவி மீண்டும் வீட்டுக்கு வந்த நிலையில் விசாரணையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக மாணவி மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே முகநூல் மூலம் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா என்பவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றதும், பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதும் தெரிய வந்தது. இதனால் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே காதலித்து வந்த ஹரிஷ் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்திய போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் சிறுமியின் குடும்ப சூழல் மற்றும் வறுமையின் காரணமாக பல்வேறு கால கட்டங்களில் இன்னும் சிலர் சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து முன்னாள் காதலன் யுவராஜ் என்கிற ஹரிஷ் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா, பெந்தட்டியை சேர்ந்த பிரேம்குமார், இடுஹட்டியை சேர்ந்த பிரவீன், சாந்தூர் பகுதியை சேர்ந்த அஜித் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஹரிஷ், பிரவீன், பிரேம்குமார், அஜித் ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதகை ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.