ஈரோடு ஜூலை 24
ஈரோட்டில் அருகேயுள்ள அவல்பூந்துறையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. கண்டிக்காட்டு வலசு , குளூர் கஸ்பா பேட்டை பூந்துறை சேமூர் ஆகிய 4 பஞ்சாயத்து சார்பில் நடந்த இந்த முகாமில்
மின்சாரத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை , காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளின் அரங்குகள் இந்த முகாமில் இடம் பெற்றிருந்தன. இதில் 4 பஞ்சாயத்துகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.
இதில் கண்டிக்காட்டு வலசு பஞ்சாயத்து தலைவர் மகாசாமி, பூந்துறை சேமூர் பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வன் , குளூர் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் மற்றும் ஏராளமான பேர் கலந்துகொண்டனர்