தென்காசி ஜுன் -7
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா மங்களாபுரத்தில் இரா.கோபிராஜ் என்பவரின் பூர்வீக சொத்து கம்பனேரி புதுக்குடி – 2 கிராமத்தில் புஞ்சை சர்வே எண் 971 ல் உள்ள சொத்துக்களை மங்களாபுரம் கிங்க் ஆப் கிங்க்ஸ் சர்ச் – ன் தலைமை போதகர் எம்.எட்வர்ட் ராஜன் என்பவர் மோசடி ஆவணங்கள் மூலம் தனது மகன் பிரசாந்த் மூர், நிசாந்த் ஐசக் ஆகியோர்களுக்கு போலியான ஆவணம் மூலம் ஏற்பாடு ஆவணம் எழுதிக்கொடுத்து அதன்பின் செண்பகவல்லி என்பவருக்கு இந்த நிலத்தை மோசடியாக விற்றுள்ளார். இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரா.கோபிராஜ் தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். புகார் மனு விசாரிக்கப்பட்டு மோசடி நடந்ததை ஊர்ஜிதம் செய்து கடையநல்லூர் காவல் ஆய்வாளருக்கு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டது இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.