செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கண் மருத்துவத்துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) ஜோதி குமார் தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி துணை கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன் கண் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் சுமதி நிலையை மருத்துவ அலுவலர் முகுந்தன் கண் மருத்துவத்துறை இணை பேராசிரியர் வசுமதி மற்றும் உதவி பேராசிரியர்கள் கவிதா அபிராமி ஸ்ரீனிவாசன் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க மேலாளர் மருத்துவர் மைதிலி முதல் நிலை மருத்துவர்கள் மற்றும் ஆப்டோ மெட்ரி மாணவர்கள் பங்கேற்றனர் இவ்விழாவில் சிறப்பம்சமாக கண் தானம் செய்த செய்தவர்களின் உறவினர்களை கௌரவிக்கப்பட்டது மேலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி கோலப்போட்டி பேச்சுப்போட்டி வாயிலாகவும் பொது மக்களுக்கு சிறு சிறு நாடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கினார் மேலும் பொது மக்களுக்கு கண்தானம் பற்றிய விழிப்புணர்வை குறித்து பேசினார்