அரியலூர், செப்:13
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளாகத்தில் தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 38 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க வட்டார தலைவர் , பழனிவேல் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் உளிட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு சங்கத்தின் கொடியினை ஒன்றிய அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சங்கத்தின் வழிமுறைகளை பின்பற்றி கோஷம் எழுப்பிபடி அனைத்து ஊழியர்களும் உறுதிமொழி ஏற்று செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டாடினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்