தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரமத்தில் அமுதகவி உமறுபுலவரின் 382-ஆவது ஆண்டு பிறந்த தின விழா அரசு சார்பில் அவரது நினைவு மணிமண்டபத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மற்றும்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், திமுக ஒன்றியச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், நவநீத கண்ணன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், எட்டயபுரம் நகரச் செயலாளர் பாரதி கணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஜமாத் தலைவர் காஜா மொஹிதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்