தஞ்சாவூர். ஏப்.15.
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனதின் 37-ம் ஆண்டுவிழா மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 45-ம் ஆண்டுவிழா பல்கலை கழக
வேந்தர் டாக்டர். கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.வெ.இராமச்சந்திரன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ.ஹேமலதா ஆகி யோர் வரவேற்புரையாற்றினர்.
பல்கலைக்கழக மற்றும் பாலிடெ
க்னிக் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுஉறுப்பினர்வீ.அன்புராஜ்,பல்கலைக்கழகபதிவாளர் பேராசிரியர். ஸ்ரீவித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவன தகவல் தொழில்நுட்பம். உயர் அழுத்தக் கொதிகலன் பிரிவு மூத்த துணைப் பொது மேலாளரும், 1995-1999 ஆண்டின் முன்னாள் மாணவி இரா.பிரதீபா
முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது, இக்கல்லூரியில் பயின்ற காலத்தில் எங்களுக்கு தன்னபிக்கையையும் மனஉறுதி யையும் வாழ்வில் முன்னேற்றத் திற்கான ஆலோசனைகளை வழங்கியது என பேசினார்.
பாலிடெக்னிக் கல்லூரியில்
1986 – 1989 பயின்ற முன்னாள் மாணவியும், திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் துறை தலைவருமா
ன பேராசிரியர் பி.ராம தேவி பேசியதாவது, தரமான ஆசிரியர்களிடம் பயின்றோம் எங்களை தங்கள் பிள்ளைகளைப் போல் அரவணைத்து ஊக்கபடுத்தி
பயிற்றுவித்தார்கள் என கூறினார்.
பல்கலை கழக வேந்தர் டாக்டர். கி. வீரமணி பேசியதாவது, மாணவர்களிடம் படிப்பாற்றலும் சிறந்த செயல் திறன்களை வெளிக்கொணர்வதும் எங்களது கடமையாகும்.பெரியாரும் அறிவிய லும், பெரியாரின் இனிவரும் உலகம் மற்றும் பெண் ஏன் அடிமை யானாள்? என்ற புத்தகங்களை மேற்கோள்காட்டினார்
பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூபாய் 10,000/- காசோலையை திருச்சிராப்பள்ளி இருக்கும் நாகம்மையார் இல்லத்திற்கு வழங்கினார். பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகதின் ஆண்டு இதழினை வேந்தர் கி. வீரமணி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்
டனர்.
சிறந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்ட து. பல்கலைக்கழகதின் இணை துணைவேந்தர் பேராசிரியர் இரா.மல்லிகா நன்றியுரை யாற்றினார்
பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics