தஞ்சாவூர் ஜூலை 26
தஞ்சாவூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 37மாற்றுத்திறனாளிகளுக்கு 9.51 ப லட்சம் மதிப்பீலானநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி பேசியதாவது:
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கா ன உதவி உபகரணங்கள், 3 சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 172 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலரு க்கு உத்தரவிடப்பட்டது. மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக் கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப் பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை திறன் குறைபாடு உடைய 10 பேருக்கு தலை ரூபாய் 10 ஆயிரத்து 815 மதிப்பிலான வாசிக்கும் கருவியும், 20 பேருக்கு தலா ரூபாய்17,000 மதிப்பிலான இயற்கை மரணம் மற்றும் ஈமை சடங்கு நிதி உதவிக் கான காசோலைகள் வழங்கப்ப ட்டன .மேலும் 2 பேருக்கு தலா ரூபாய் 72,500 மதிப்பிலான செயற்கை உபகரணங்களும் 4 பேருக்கு ரூபாய் 65 ஆயிரத்து 600 மதிப்பிலான செயற்கை உபகரண ங்களும் ,ஒருவருக்கு ஸ்கூட்டரும் என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 51 ஆயிரத்து 561 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.