வேலூர்-17
வேலூர் மாவட்டம் , பாட்டாளி மக்கள் கட்சியின் 36ஆம் ஆண்டு துவக்க விழாவினையெட்டி சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணை அருகில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் சம்பத், தலைமையிலும், வேலூர் மாவட்ட தலைவர் பி. கே. வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி, மகளிர் அணி மலர்விழி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே .எல்.இளவழகன், கலந்து கொண்டு பாமக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும் ,கட்சி நிர்வாகிகளுக்கும், இனிப்புகள் வழங்கினார். உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், பள்ளிகொண்டா நகர தலைவர் சுகுமார், பள்ளிகொண்டா நகரச் செயலாளர் குமரவேல், பாமக மாவட்ட அமைப்பு தலைவர் சாரதி வர்மன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் காதர் பாஷா, 2வது மண்டல தலைவர் வேல்முருகன், 3வது மண்டல தலைவர் செந்தில் 3வது மண்டல செயலாளர் சரவணன் மண்டல செயலாளர் வினோத் இளைஞர் அணி துணைச் செயலாளர் துரை, சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா, பாமக சிவலிங்கம், அருணாச்சலம், மகளிர் அணி தலைவர் மலர்கொடி, மற்றும் பாட்டாளி சமூக ஊடக பேரவை தலைவர் எஸ் தேவா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.