வேலூர்_25
வேலூர் சலவன் பேட்டை செங்கனத்தம் ரோடு எம்ஜிஆர் நகரில் எழுந்தருள் இருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் 35 ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது இத் திருவிழாவில் காலை கருமாரி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனையும் கரகம் திருவீதி உலா நடைபெற்றது பிறகு அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது அன்று இரவு ஸ்ரீ கருமாரியம்மன் பம்பை நையாண்டி மேளம் நாதஸ்வரம் பேண்ட் செட் வானவேடிக்கையுடன் அம்மன் பூ பல்லாக்கு திருவீதி உலா வெகு சிறப்பாக நடந்தது இத் திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நாளை கருமாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் நடைபெற உள்ளது