திருப்பூர் செப்டம்பர் 26
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் தா..கிறீஸ்துராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த ஒரு வார காலத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்கள், பிரியாணி கடைகள் மற்றும் சைவ கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட சுமார் 148 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ஆய்வின் போது சுகாதார குறைபாடுகள் உள்ள 23 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் 20 பிரியாணி உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்க்காக அனுப்பப்பட்டது. உணவு வணிகர்களுக்கு சுகாதாரமான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள தரமானதாக வாங்கி முறையாக சேகரம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அசைவ மூலப்பொருட்களை அன்றாட தேவைக்கு தகுந்தாற்போல் வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இறைச்சி உள்ளிட்ட உணவு தயாரிக்க பயன்படும் அனைத்து மூலப்பொருட்களையும் வாங்கியதற்க்கான இரசீது கடையில் வைத்திருக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணெயை ஊற்றி டாப் அப் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. உணவு வணிகர்களுக்கு RUCO பற்றிய விழிப்புணர்வு வழங்கப்ட்டது. மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், பூச்சி தொற்று இல்லாதவாறு இருக்கவும், தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும், பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும், உணவுப்பொருள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவுப்பொருள் கையாளுபவர்கள் தன் சுத்தம் கடைபிடிக்கவும் கையுறை, மற்றும் தலையுறை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.