டிச. 8
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் தடை செய்யப்பட்ட 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் இளங்கோவன், ஆறுச்சாமி, ரமேஷ், ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூண்டு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூண்டு வகைகள் எனும் பூண்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கின்றனவா என கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான கடைகளில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் ஆகியவற்றில் விளைந்த பூண்டு வகைகள் விற்பனையில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ அளவிலான பூண்டுகள் 22 மூட்டைகள் இருந்தது மேற்படி பூண்டானது சீனா வகையை சார்ந்ததாக இருக்குமோ என சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 330 கிலோ கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து கண்காணிப்பு உணவு மாதிரி ஒன்று எடுத்து உணவு பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சீனா பூண்டுனது காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பகுதிகளில் இருந்து வித்தியாசமாக இளம் ஊதா நிறம், எதும் கலக்காமல் முற்றிலுமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாக இந்த பூண்டு நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுவது. நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பூண்டுகள் சீனாவை சேர்ந்தவை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. எனவே மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் சீனா பூண்டுகளை வாங்கி விற்பனையில் ஈடுபட வேண்டாம். என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.