தஞ்சாவூர் ஆகஸ்ட் 22
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின்படி தஞ்சாவூ ர் மாநகராட்சி உட்பட்ட 14 கோட்டங் களிலும் குறிப்பாக புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் என குழுவாக ஒவ்வொரு கோட்டத்திலும் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதிக்க ப்பட்ட கடைகளில் 18 வயதுக்குட் பட்ட நபர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற விளம்பர பதாகை வைக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் வரை எவ்வித புகையிலை பொருள் கள் விற்பனை செய்யவோ,புகை பிடிக்கவோ அனுமதி கிடையாது எனவும் தெரிவித்தனர்.
பொது இடங்களில் புகைபிடித்த 18 பேர் நபர்கள் மற்றும் பள்ளிக்கு அருகில் புகையிலை விற்ற 33 கடைக்காரர்கள் உள்ளிட்டவர்களி டம் அபராதமாக ரூபாய் 13 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.