கன்னியாகுமரி செப் 18
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வாறுதட்டில் தனியார் கிளப்-பின் 32 வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட அளவிலான கபடி போட்டி , வழுக்கு மரம் ஏறும் போட்டி, அத்த பூ போட்டி ,வடம் இழுத்தல் போட்டி, விவசாய கண்காட்சி போட்டி, விளையாட்டு போட்டிகள் எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன
தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்திற்கு வாறுதட்டு பள்ளி ஆசிரியர் ஜோயல்ராய் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்சார மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் கலந்து கொண்டார் . கிளப் தலைவர் சமூக சேவகர் டாக்டர் சுரேஷ்குமார் , வழக்கறிஞர் தனசிங் வாறுதட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் , ஜெனில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழா முடிவில் நலத்திட்ட உதவிகளாக தொழில் புரிய 8 தையல் இயந்திரம் மற்றும் முதியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.