மத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வானதி விடுத்துள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அவரை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை பயி ருக்கு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத் தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் மத்தூர் வட் டாரத்திற்கு உட்பட்ட நிலக்கடலை பயிருக்கு அறிக்கை செய்யப்பட்டு காப்பீடு செய்ய 31.12.24 இறுதி நாளாக காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட் டத்தை செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ,விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு அதிகபட்ச இழப்பீடாக நிலக்கடலை பயிருக்கு ரு.21,300 வழங்கப்ப டும். இத்திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத் திற்கு, பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் அரு காமையில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி நிலக்கடலை பயி ருக்கு காப்பீடு செய்ய ஏக்க ருக்கு ₹320 செலுத்தி காப் பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன் பெற முன் பதிவு படி ஆதார், எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை மக்கள் கணினி மையத்திற்கு சென்று பதி வேற்றம் செய்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்