ராமநாதபுரம், செப்.1-
வரலாற்று நகரம் தொண்டியில் தமுமுக தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 30ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு தமுமுக மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது.
தொண்டி பேரூர் தலைவர் செய்யது முகமது அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா கழகத்தின் கொடியேற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகள் பற்றியும் ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு செய்யும் மனித நேய பனிகள் பற்ற்றியும் சிறப்புரை ஆற்றினார். தொண்டி அனைத்து பள்ளிகளும் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. தொண்டி அன்பாலயா மனநலம் குன்றிய உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இரண்டு நபர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 20ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொண்டிய ஐக்கிய ஜமாத் செயலாளர் ஹாலித் மரைக்காயர் கலந்து கொண்டார் . தமுமுக செயலாளர் முகமது மைதீன், மமக செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் ஹம்மாது ஜலால் சலீம், அப்துல்ரஹிம்,
அப்துல்லாஹ், பரித் சித்திக் அலி, பெரிய சாமி, ராஜா ராம், முஸ்தபா, சபிக், அக்ரம் தமிம் ராவுத்தர் இதற்கான ஏற்பாடுகளை தொண்டி பேரூர் நிர்வாகிகள் செய்திருந்தனர். செயலாளர் பரக்கத் அலி நன்றி கூறினார்.