சென்னை, செப்டம்பர் – 06,
சென்னை துறைமுகம் பொறுப்பு கழகத்தில்
அப்ரண்டீஸ் பயிற்சி பணியாளர்களை கடந்த 30 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யமால் இருப்பதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
எஃப்.டி.ஏ 1991 – 94 பேட்ஜ் சங்க இணை செயலர் லூகாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சென்னைத் துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி பணிகாக 1989 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு,1991 – 94 – ல் 2வது பேட்ச் பயிற்சி பணியாளர்களாக 150பேரை தேர்வு செய்து, மூன்றாண்டுப் பயிற்சியின் இறுதியில் தேசிய அளவில் தேர்வையும் நடத்தி அதில் வெற்றி பெற்ற எங்களுக்கு,
பயிற்சி முடித்து 30 ஆண்டுகள் ஆகியும் நிரந்தர பணி ஆணையினை வழங்காமல் துறைமுக நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எங்களுக்கு நிரந்தரப் பணி வழங்காத நிலையில் மேலும் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யும் துறைமுகத்தின் செயல் கண்டிக்கத்தக்தாகும். அப்ரண்டீஸ் சட்டபடி 1961 பிரிவு- 8-ன் படி தேவைபடும் பயிற்சி பணியாளர்களை சேர்த்துக் கொண்ட நிர்வாகம் பணி ஆணையை மட்டும் வழங்க மறுத்து தடை ஆணையை பிறப்பித்துள்ளது. இத்தடையை நீக்கி நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டி .ஆர் .ஆர்.செங்குட்டவன், அமைப்புசாரா கூட்டமைப்பு தலைவர் தோழர் கீதா, ஏ. எஸ் குமார்,ஸ்டீபன் மதன் எஃப்.டி.ஏ செயற்குழு உறுப்பினர் மரிய சூசை, பி.டி. சண்முகம், முத்தையா குமரன்,கவிஞர் அ.ப.பாலசுப்பிரமணியன், மாரியப்பன், அம்பேத்பாபு வழக்கறிஞர் செங்கோல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.