ஈரோடு, டிச 1
மத்திய அரசு கடந்த நவம்பர் 1-ந் தேதி வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.விதித்துள்ளது இதன் காரணமாக தொழில் செய்யும் வணிகர்கள் கடும் பாதிப்பு அடைவார்கள் என்றும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 18 சத வீதம் ஜி.எஸ்.டி வரியினை திரும்ப பெற வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்க கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோட்டில் ஒரு நாள் கடைய டைப்பு போராட்டம் நடந்தது இந்த கடை யடைப்பு போராட்டத்திற்கு 75 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன.
ஜவுளி சந்தைகள் சிறிய கடைகள் மற்றும் பெரிய ஜவுளி நிறுவனங்கள் வரை கடைகள் மூடப்பட்டு சாலை கள் வெறிச்சோடி காணப்பட்டன மஞ்சள் சந்தைகளும் மூட ப்பட்ட ன. மேலும்
எலக்ட்ரிக்கல் கடைகள். அரிசி மண்டிகள் உள்பட பல்வேறு கடைகளும் அடைக்க ப்பட்டு இருந்தன. இந்த கடை அடைப்பு போராட்டத்தினால் சுமார்
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன . இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது போல சத்தியமங்கலம் கோபி போன்ற இடங்களிலும் கடையடை ப்பு போராட்டம் நடைபெற்றது .
இதுபற்றி கூட்டமைப்பின் தலைவர் ராஜ மாணிக்கம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே சிறு. குறு தொழில் நிறுவனங்கள் வரிவிதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிலும் மந்த நிலையில் நடைபெற்று வரும் சூழ்நிலையில் வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் புதிய வரி விதிப்பால் தமிழகம் முழு வதும் 63 லட்சம் சிறு வியா பாரிகள் பாதிக்கப்படுவர்.
எனவே வாடகை கட்டி டங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 18 விழுக்காடு வரியை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.