சென்னை , நவ-02, இந்தியன் வங்கியின் 2024 -செப்டம்பர், 30 காலாண்டு அரையாண்டு நிதிசார் அறிக்கையை சென்னை இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
தலைமை செயல் செயல் அலுவலர் சாந்திலால் ஜெயின், நிர்வாக வாக இயக்குநர்கள் அஸுதோஷ் சவுத்ரி, சிவ்பஜ்ரங் சிங், பிரஜேஷ் குமார் சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டை விட 10% உயர் ₹12.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.
இதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “நியூஸ்வீக்” இதழ், இந்தியாவில் வங்கி சேவை துறையில் அதிக நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் என்று இவ்வங்கி இந்தாண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற பரப்புரை திட்டத்தில் (2024 ஜுன் 5 முதல் – 2024 அக்டோபர் 5 வரை) திட்ட இலக்கைவிட கடந்து 110% சாதனையை எட்டி மெகா மைல்ஸ்டோன் விருதுகளில் “எக்ஸலன்ஸ் மைல்ஸ்டோன்” என்ற அதிக கௌரவமிக்க விருதை வென்று இந்தியன் வங்கி பெருமை சேர்த்திருக்கிறது.
வணிகத்தில் நிகர இலாபம் செப்டம்பர்’23-ல் ₹1988 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹2707 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 36% உயர்ந்திருக்கிறது.
செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’23-ல் ₹4303 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹4728 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது.
நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’23-ல் ₹5741 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹6194 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 8% அதிகரித்திருக்கிறது.
கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’23-ல் பதிவான ₹805 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’24-ல் ₹891 கோடி என உயர்ந்திருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’23-ல் 1.06% என்பதிலிருந்து 27 bps அதிகரித்து செப்டம்பர்’24-ல் 1.33% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) செப்டம்பர்’23-ல் இருந்த 19.90% என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 114 bps மேம்பட்டு 21.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
கடன்கள் மீதான ஈட்டம் (YoA) செப்டம்பர்’23-ல் 8.75% என்பதிலிருந்து 2 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 8.77% ஆக அதிகரித்திருக்கிறது
முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), செப்டம்பர்’23-ல் இருந்த 6.77% என்பதிலிருந்து 40 bps உயர்வுடன் 7.17% ஆக செப்டம்பர்’24-ல் பதிவாகியிருக்கிறது
மொத்த கடன்கள், செப்டம்பர்’23-ல் பதிவான ₹492288 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 12% வளர்ச்சி பெற்று ₹550644 கோடியாக அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்தனர்.