இரணியல், நவ- 29
சாமியார்மடம் அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ் (58). சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று மாலை அவரது மனைவி புஷ்பலதா (55), மாமியார் சொர்ணம் (71), உறவு பெண் சுகிர்தா (19) ஆகியோரை கொண்டு ஆட்டோவில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வில்லுக்குரிய அருகே தோட்டியோடு ஜங்ஷன் செல்லும்போது சிக்னல் விழுந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸுக்கு பின்னால் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினி டெம்போ ஆட்டோ மீது பயங்கரமாக மோதியதில், ஆட்டோ முன் பக்கம் நின்ற பஸ்சில் மோதி நசுங்கியது.
இதில் ஜெயதாஸ் ,புஷ்பலதா, சொர்ணம், சுகிர்தா ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பயணிகள் அவர்களை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நான்கு பேருக்கும் தீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் ஜெயக்குமார் (36) என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.