மார்த்தாண்டம், மார். 21-
மார்த்தாண்|டம் அருகே உள்ள புத்தன் சந்தை பகுதியில் சிறப்பு சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டியும் டிரைவர் நிற்காமல் சென்று விட்டார். இதை கண்ட போலீசார் வாகனத்தை விரட்டி சென்று டெம்போவை மடக்கிப் பிடித்தனர். ஆனால் அதற்குள் டெம்போவை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் அந்த டெம்போவில் சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து டெம்போவுடன் அரிசியை மார்த்தாண்ட காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து டெம்போ டிரைவர் யார்? உரிமையாளர் யார்? என இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.