தக்கலை ஜன 13
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் நேற்று அதிகாலை அழகிய மண்டபம் பகுதியில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காலை 8.00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மார்த்தாண்டம் பதிவெண் கொண்ட (TN.75 F 2970) ஈச்சர் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த வாகனம் வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. எனவே அந்த வாகனத்தினை பின் தொடர்ந்து சுவாமியார்மடம் சந்திப்பு அருகே வழிமறித்து சோதனை செய்த போது அந்த வாகனத்தில் நூதன முறையில் மறைத்து வைத்து இருந்த சுமார் 3 டன் அளவிலான ரேசன் அரிசி கடத்தி செல்வது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தை மூலமாக அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்த ரேசன் அரிசி தமிழ் நாடு அரசு உணவு பொருள் வாணிப கழக உடையார் விளை கிட்டங்கியில் ஒப்படைக்கப் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.