கருங்கல், நவ- 29
கருங்கல் அருகே கருக்குபனையை சேர்ந்த பிளம்பர் ஒருவரிடம் வெளி மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று இரவு கருங்கல் அருகே பூக்கடை என்ற பகுதியில் பிளம்பிங் வேலைக்கு சென்றனர். இரவில் உணவு வாங்குவதற்காக மூன்று பேரும் பைக்கில் கருங்கல் சென்று உணவு வாங்கி விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மத்திகோடு பகுதியில் பைக்கில் வரும் போது நாகர்கோவில் இருந்து மேல் மிடாலம் நோக்கி சென்ற அரசு பஸ் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகாடை கடந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்து வரியால் துடித்தனர். ஒரு வாலிபர் லேசான காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்