தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023-24 -ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கக தோ்வுக் குழுவால் மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் தோ்ந்தெடுக்கப்பட்டன.
இவற்றில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் கடலாடி வட்டம், ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. கமுதி இக்பால் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில், திருப்புல்லாணி வட்டம், புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மூன்றாமிடம் பிடித்தது. சென்னையில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வருகிற 14-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இதற்கான விருதுகள் வழங்கப்படும்.