குளச்சல், பிப்-1
குளச்சல் துறைமுகச் சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் ரெஜினால்டு (31). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தனது 9 மற்றும் 6 வயது பிள்ளைகளுடன் சென்று கொண்டிருந்தார். பைக் குளச்சல், வாணியக்குடியில் உள்ள காணிக்கை மாதா மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் ரெஜினால்டு பைக்கில் மோதியது.
இந்த விபத்தில் ரெஜினால்டு மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகள் என மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெஜினால்டு குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார்
விபத்தை ஏற்படுத்தியதாக சைமன் காலனியை சேர்ந்த ஜெனிஸ்டன் (26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.