நித்திரவிளை , ஜன- 6
நித்திரவிளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அந்தப் பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பத்துஏக்கர் என்ற பகுதியில் சாலையோரம் அமர்ந்து சிலர் மது குடித்து மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சர்ஜன் (35),சின்னத்துறை பகுதி ராஜ் (35), வள்ளவிளை சுனாமி காலனி சேர்ந்த அஸ்வின் (19)ஆகிய மீன்பிடி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். நித்திரவிளை போலீசார் மூன்று பேர் மீதும் பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்குப்பதிவு செய்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.